அரச்சமாவு...

ஏதோ அரச்சமாவயே மறுபடி அரைக்கறோம்...

Thursday, February 21, 2008

Mokkai - Part I

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்ஆனா,நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.---ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

டிசம்பர் 31க்கும்,ஜனவரி 1க்கும்ஒரு நாள்தான் வித்தியாசம்.ஆனால்,ஜனவரி 1க்கும்,டிசம்பர் 31க்கும்,ஒரு வருசம் வித்தியாசம்.இதுதான் உலகம்.

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா,சத்தம் போட்ட கொலுசு வருமா?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.இதுதான் உலகம் (ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)

T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரியவீரனா இருந்தாலும்,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்க முடியாது.

இளநீர்லயும் தண்ணி இருக்கு,பூமிலயும் தண்ணி இருக்கு.அதுக்காக,இளநீர்ல போர் போடவும் முடியாது,பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

உங்கள் உடம்பில்கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூடஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.ஆனால்...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும், Rewindலாம் பண்ண முடியாது.

"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?"Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e" இருக்கும்.

Wednesday, February 20, 2008

சென்னைத் தமிழில் கம்பியூட்டர் வார்த்தைகள்

இத்த நா ரெம்ப நாள் மின்னாடி பட்ச்சது, நீங்களும் பட்ச்சிருப்பீங்கனு நெனக்கரேன் , நேரம் இருந்தா உன்னொரு தபா படிங்கோ..


Open = தொற நைனா
Close = பொத்திக்கோ
Print Preview = பாத்து பிரிண்ட் அடி
View = லுக்கு வுடு
Cut = வெட்டு
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
File = பெய்லு
Save = வெச்சுக்கோ
Save as = அய்யே... இப்படி வெச்சுக்கோ
Save All = அல்லாத்தியும் வெச்சுக்கோ
Find = தேடு
Find Again = இன்னொரு தபா தேடு
Move = ஜகா வாங்கிடு
Zoom = பெர்சா காட்டு
Zoom Out = வெளில வந்து பெர்சா காட்டு
New = புச்சு
Old = பள்சு
Replace = இதெ தூக்கி அதிலே போடு, அதே தூக்கி இதிலே போடு
Run = ஓடிடு நைனா
Execute = கொன்னிடு
Delete = கீஸிடு
Tools = இஸ்பானரு
Toolsbar = இஸ்பானர் செட்டு
Exit = ஓட்ரா டாய்
Compress = அமுக்கி போடு
Scrollbar = இங்க அங்க தள்ளு
Next = அப்பால
Previous = முன்னாங்காட்டி
Trash bin = குப்ப தொட்டி
Drag & hold = நல்லா இஸ்து புடி
Double click = ரெண்டு தபா தட்டு
Do you want to delete selected item? = மெய்யாலுமே தூக்கிடவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சுக்கவா?
Abort, Retry,Ignore = இஸ்டம் இல்லாங்காட்டி உட்டுடு
Yes, No, Cancel= இப்ப இன்னா சொல்ற நீ?
General protection fault = அல்லாங் காலி
Access denied = கைய்ய வெச்சா கீஸிடுவேன்
Unrecoverable error = படா பேஜாருமா
Operation illegal = பேமானி... சாவுங்க்ராகி... கஸ்மாலம்...

Labels: , , ,

Tuesday, February 19, 2008

இது என் வேலை இல்லை!

இது என் வேலை இல்லை!


இந்த புகைப்படம் உன்மையானது தானா என்று தெரியவில்லை, எங்கு எடுக்கப்பட்டது என்றும் தெரியவில்லை. ஆனால் சிரிப்பை வர வைக்கக் கூடிய ஒன்று. நன்பர்களில் ஒருவர் பார்வர்டாக அனுப்பியது (அரச்சமாவு தானுங்கோ.... :) ).

சென்ற வருடத்திற்க்கான "இது என் வேலை இல்லை" அவார்டு



Labels: ,

Wednesday, February 6, 2008

கரகாட்டக்காரன் காமடி தொடருது - சாப்ட்வேர் இஞ்சினியரா

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன்" பார்ட்-II
(யாரோ முன்னாடியே அரச்சமாவுதான்ங்க - எனக்கு வந்த forwards-ல் படித்து ரசித்தது...)

கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் - டீம் லீட்.
கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.

செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார்.

புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு...

கவுண்ட்ஸ்: ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன...ஏய் சொல்லு...சொல்லு

புதுசு: சொல்றங்க!!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் "A" போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!

கவுண்ட்ஸ்: ஓடிப்போ நாயே!!! (செந்திலைப் பார்த்து): ஏண்டா இப்படி பண்ண?

செந்தில்: ஒரு விளம்பரம்தான்...

கவுண்ட்ஸ்: ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான்!!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?(சரளாவைப் பார்த்து): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?லொல்லு????

கோ.சரளா: தோ!! கொஞ்சம் சும்மா இருக்கீகளா!!! என்னை TCSல கூப்டாகோ, Wiproல கூப்டாகோ, infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன்...

கவுண்ட்ஸ்: ஹிம்ம்ம்ம்ம்ம்......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ, நியூ யார்க்ல IBMல கூப்டாகோ.... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?

கோ.சரளா: ஹிக்க்க்க்ம்...இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை...

கவுண்ட்ஸ்: ஒழுங்கா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க!!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன்! ஜாக்கிரதை!!!

ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்...

Labels: , ,

குத்திக் காட்டியது - என் தமிழ்

குத்திக் காட்டியது - என் தமிழ்


தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று ...!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று ...!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று ...!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று ...!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று ...!

மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று ...!

இரவில் ...
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் ...
'அம்மா' என்று அலறினேன்

குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்


- என்றோ படித்தது 'forward'-அ வந்த ஒரு ' mail'-ல்...

Labels: , ,

தமிழில் ஜாவா...

தமிழில் ஜாவா

தமிழில் ஜாவா புரோகிராம் எழுதினா எப்படி இருக்கும்...?
(நான் ரசித்த பார்வர்டுகளில் ஒன்று:)

பொது வகுப்பு கூடிகும்மிஅடிப்பு
{
பொது நிரந்திர ஒன்னும்மில்லா முக்கிய (கம்பி வாக்குவாதங்கள்[])
{
எண்கள் அ;
கம்பி ஆ;
ஒருவேளை (அ == 0)
{
ஆ = "பூஞ்சியம்";
}
இல்லன்னா
{
ஆ = "பூஞ்சியம் இல்லை";
}
திரும்பி போ;
}
}


புரியாதவர்கள் கீழே பார்க்கவும்:


public class Project
{
public static void main(String args[])
{
int a;
string b;

if(a==0)
{
b = "Zero";
}
else
{
b = "Non-Zero";
}
return;
}
}

Labels: , , ,

 
`